News August 3, 2024
கோவையில் திறந்து வைக்கிறார் முதல்வர்

கோவையில் தமிழ்புதல்வன் திட்டத்தை ஆக.9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இதனையடுத்து உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே கட்டப்பட்டுள்ள ரூ.460 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து, வடவள்ளி செல்லும் லாலி ரோடு சந்திப்பில் அமைய உள்ள புதிய மேம்பாலம், கலைஞர் நூலகம், அறிவுசார் மையம், ஆதரவற்றோர் தங்கும் விடுதி ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.
Similar News
News December 10, 2025
கோவை கலெக்டர் பெயரில் போலி FACE BOOK

சமூக வலைத்தளங்களில் அரசு அதிகாரிகள் முக்கிய நபர்களின் புகைப்படங்கள் பெயர் வைத்து போலி கணக்குகள் துவங்கி பணம் பெற்று மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை கலெக்டர் பவன்குமார் பெயரில் புகைப்படத்துடன் முகநூலில் போலி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. இக்கணக்கிலிருந்து அவரது நண்பர்களுக்கு நட்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 10, 2025
கோவை மாவட்டத்திற்கு விருது

ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு நிலத்தடி நீர் மேம்பாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக கோவை மாவட்டத்திற்கு அண்மையில் மத்திய அரசு விருது வழங்கிய கௌரவித்தது. இந்த விருதினை பெற்ற கோவை கலெக்டர் பவன்குமார் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது, சப்-கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே உடன் இருந்தார்.