News April 21, 2025

கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு

image

தவெக பூத் கமிட்டி மாநாடு, வரும் 26,27 ஆகிய தேதிகளில், கோவை சரவணம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு, மேற்கு மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களுடன் பேசவுள்ளார். இதில் 2026 சட்டமன்ற தேர்தல் களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு விளக்கவுரை ஆற்றவுள்ளார்.

Similar News

News December 15, 2025

கோவை: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

News December 15, 2025

கோவை: கூட்டுறவு வங்கியில் வேலை: ரூ.32,000 சம்பளம்!

image

கோவை மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.32,020 – ரூ.96,200 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே பதிவு செய்து உங்கள் வேலையை உறுதி செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!

News December 15, 2025

கோவை: ஊர்க்காவல் படையில் சேர அழைப்பு

image

கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் உத்தரவின்படி, கோவை ஊர்க்காவல் படையில் காலியான பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. கோவை மற்றும் சுற்றுப்புற ஆண்கள் 15.12.2025 மாலை 5 மணிக்குள் காந்திபுரம் C1 காட்டூர் காவல் நிலைய வளாகத்தில் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 45 வயது வரையிலான, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் அல்லது தேர்ச்சி பெறாதோரும் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 31.12.2025 ஆகும்.

error: Content is protected !!