News October 8, 2024
கோவையில் கொட்டித் தீர்த்த கனமழை

கோவையில் நேற்று மாலை பெய்த கனமழையால், சாலைகளில் நீர் தேங்கியது. அரசு மருத்துவமனையின் உள்ளே சாக்கடைநீர் கலந்த மழைநீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் அவதிப்பட்டனர். மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதேபோல் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் முழங்கால் அளவு வெள்ளம் தேங்கியதால், ரயிலை பிடிக்கச் சென்ற பயணிகள், உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர்.
Similar News
News April 30, 2025
தொழிலாளியின் கன்னத்தை கடித்து துப்பிய போதை ஆசாமி

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த இம்ரான்(38), லாலி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றபோது, அங்கு வந்த ராஜனுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜன், இம்ரானின் கன்னத்தை கடித்து துப்பினார். காயமடைந்த இம்ரான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 29, 2025
கோவை: பள்ளத்தில் கவிழ்ந்த கார்

கோவை சூலூரை சேர்ந்த ஸ்ரீநிவேதா, தனது தாயார் வாணியுடன் காரில் செஞ்சேரி மலை முருகன் கோயிலுக்கு சென்றிருக்கிறார். பார்க்கிங்கில் காரை நிறுத்த முயன்ற போது, பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால், 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக ஏர்பேக் ஓபன் ஆனதால், இருவரும் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 29, 2025
கோவை: முக்கிய காவல் நிலைய தொடர்பு எண்கள்!

▶️ காந்திபுரம் – 9498101143. ▶️ ஆர்.எஸ்.புரம் – 0422-2475777. ▶️ மதுக்கரை – 9498101184. ▶️ பேரூர் – 0422-2607924. ▶️ தொண்டாமுத்தூர் – 0422-2617258. ▶️ பெ.நா.பாளையம் – 9498101189. ▶️ மேட்டுப்பாளையம் – 9498101186. ▶️ அன்னூர் – 9498101173. ▶️ கருமத்தம்பட்டி – 9498101178. ▶️ சூலூர் – 7845175782. ▶️ பொள்ளாச்சி டவுன் – 04259-224433. ▶️ ஆனைமலை – 04253-282230. ▶️ வால்பாறை – 9487374392. இதை SHARE பண்ணுங்க.