News November 23, 2024
கோவையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்

ஈசா யோகா மையத்தில் நேற்று இன்சைட் எனும் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத், ராக்கெட்களை உருவாக்கியவர் அப்துல் கலாம் என்றும், இன்று இளைஞர்களுக்கு ஈசா உருதுணையாக உள்ளது என்றார்.
Similar News
News December 14, 2025
கோவையில் இப்பகுதியில் மின்தடை

கோவை, பட்டணம் பகுதியில் நாளை (டிச.15) ஆம் தேதி திங்கட்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்தியநாராயணபுரம், பள்ளபாளையம், கராவளி சாலை, நாகம்ம நாயக்கன்பாளையம், காவேரி நகர், காமாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
News December 14, 2025
கோவையில் பாலியல் தொழில்: அதிரடி கைது!

கோவை, இடையபாளையம் பழனியம்மாள் லே-அவுட் பகுதியில், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக நான்கு பெண்களை, கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்தனர். விசாரித்ததில், தடாகம் சாந்தாமணி கேஜி புதூர் பிரிவு பத்மாவதி (27,) மருதமலை அண்ணாநகர் எலிசபெத் ராணி (30), சிங்காநல்லூர் சாந்தி (40) என தெரியவந்தது. கைது செய்த பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
News December 14, 2025
கோவை: மரத்தில் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம்!

கோவை இருகூரில் இருந்து எல் அண்ட் டி பைபாஸ் செல்லும் சாலையில், நேற்று முன்தினம் இரவு, சாலையோர புளிய மரத்தில் ஆண் ஒருவர் தூக்கிட்டு இறந்து கிடப்பதாக, சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கோவை ஜி ஹெச் அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குபதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


