News August 7, 2024
கோவையில் இன்றே கடைசி நாள்

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் எம்ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, எம்எஸ்சி இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட 21 முதுகலை படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இதில், நடப்பாண்டில் 557 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் பதிவுசெய்யலாம். முதுகலை படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என கல்லூரி முதல்வர் எழிலி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 14, 2025
கோவையில் பாலியல் தொழில்: அதிரடி கைது!

கோவை, இடையபாளையம் பழனியம்மாள் லே-அவுட் பகுதியில், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக நான்கு பெண்களை, கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்தனர். விசாரித்ததில், தடாகம் சாந்தாமணி கேஜி புதூர் பிரிவு பத்மாவதி (27,) மருதமலை அண்ணாநகர் எலிசபெத் ராணி (30), சிங்காநல்லூர் சாந்தி (40) என தெரியவந்தது. கைது செய்த பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
News December 14, 2025
கோவை: மரத்தில் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம்!

கோவை இருகூரில் இருந்து எல் அண்ட் டி பைபாஸ் செல்லும் சாலையில், நேற்று முன்தினம் இரவு, சாலையோர புளிய மரத்தில் ஆண் ஒருவர் தூக்கிட்டு இறந்து கிடப்பதாக, சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கோவை ஜி ஹெச் அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குபதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
News December 14, 2025
கோவை: சொந்த வீடு வேணுமா? இங்க போங்க!

பலரும் அறிந்திடாத ஓர் அற்புதமான மலைக்கோயில்தான் பதிமலை பாலமுருகன் கோயில். இக்கோயில் கோவை, ஒத்தக்கால் மண்டபம் பிச்சனூர் அருகே அமைந்துள்ளது. கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள், இங்கு மனமுருக வேண்டினால் விரைவில் பலிக்குமென்பது ஐதீகம். செங்கற்களை அடுக்கிவைத்து வேண்டினால், விரைவில் சொந்த வீடு வாங்கும் யோகம் அமையும் என்பது நம்பிக்கை. சொந்த வீடு கனவு காணும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்


