News November 23, 2024
கோவையில் இன்று முதல் வரிவசூல் முகாம்

கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு 2024-25ஆம் நிதியாண்டின் 2ஆம் அரையாண்டு வரையிலான கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரியினங்களையும் பொதுமக்கள் செலுத்துவதற்கு வரும் 23,24இல் வரி வசூல் முகாம்கள் நடைபெற உள்ளது. மேலும் முகாம் நடைபெறும் அட்டவணையும் வெளியிடப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.
Similar News
News November 13, 2025
கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் இன்று வெளியிட்டில் அறிக்கையில் நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்கு தொகைகள், ஆகியவற்றை அவற்றின் உரிமையாளர்கள் அல்லது சட்ட வாரிசுகளுக்கு கிடைக்க பெறுவதற்கான விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 14ஆம் தேதிமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் என்றார்.
News November 13, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ் கணுவாய், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 13, 2025
கோவை வரும் பிரதமர் மோடி!

தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், வரும் நவம்பர் 19ஆம் தேதி அன்று கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இயற்கை வேளாண் மாநாடு நடைபெற உள்ளது. இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். மேலும், இந்த மாநாட்டின் போது பிரதமர் வேளாண் விஞ்ஞானிகளை சந்திக்கிறார்.


