News August 9, 2024
கோவையில் அர்ஜுன் சம்பத்துக்கு அபராதம்

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரூ.1001 பரிசு என்று சமூகவலைதளத்தில் அர்ஜுன் சம்பத் பதிவிட்டிருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம், விசாரணைக்காக ஆஜரான அர்ஜுன் சம்பத்திடம் விசாரித்தினார். நீதிபதி முன்பு குற்றத்தினை ஒப்புக்கொண்ட அர்ஜுன் சம்பத்துக்கு கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அவருக்கு நேற்று ரூ.4,000 அபராதம் விதித்தது. உங்கள் கருத்து?
Similar News
News November 25, 2025
கோவையில் இங்கெல்லாம் மின்தடை

கோவையில் இன்று (நவ.25) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், ஆர்எஸ்புரம், ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டிபிசாலை, லாலி சாலை, தடாகம் சாலை, சுக்கிரவாரிபேட்டை, காந்திபார்க், சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமலை, நெகமம், ஆர்சிபுரம், ஜே.கிருஷ்ணாபுரம், வடசித்தூர் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி மின்விநியோகம் இருக்காது. (SHARE)
News November 25, 2025
CM ஸ்டாலின் இன்று கோவை வருகை

செம்மொழிப் பூங்கா திறப்பு கள ஆய்வுப் பணிகள் மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.25) கோவை வருகிறாா். பின், செம்மொழிப் பூங்காவில் உள்ள கலையரங்கில் பள்ளி மாணவா்கள் மற்றும் கோவை தொழிலதிபா்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடுகிறாா். தமிழக காப்புத்தொழில் உருவாக்க மையம் நடத்தும் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசுகிறாா்.
News November 25, 2025
மூளை காய்ச்சல்: கோவை மக்களே உஷார்

கேரள மாநிலத்தில் மூளை காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் குமரன் நேற்று விடுத்த அறிக்கையில் மாசடைந்த (அ) தேங்கியிருக்கும் தண்ணீரில் உள்ள அமீபாக்கள் மூக்கின் மூலமாக சென்று மூளையை தாக்கி காய்ச்சலை உண்டாக்கும். இதனால் பொதுமக்கள் மற்றும் கேரளா செல்லும் பக்தர்கள் தேங்கி இருக்கும் நீரில் குளிக்கும்போது மூக்கை மூடிக்கொண்டு குளிக்க வேண்டும் என அதில் அறிவுறுத்தியுள்ளார்.


