News October 23, 2024
கோவையிலிருந்து 1,260 சிறப்பு பேருந்துகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையிலிருந்து 1,260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்து சேவையானது 28ஆம் தேதி முதல் 31ம் தேதி அதிகாலை வரை செயல்படுத்தப்பட உள்ளதாகவும் 28ம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை. மேலும் கோவை மண்டலத்திலிருந்து தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காந்திபுரம் நகர பேருந்து நிலையம் நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் என்று தெரிவித்தனர்.
Similar News
News November 3, 2025
கோவையில் கணவனுக்கு நேர்ந்த சோகம்.. மனைவி கைது!

கோவை வீர கேரளத்தை சேர்ந்த நிஷாந்த் குமார், காந்திபுரம் ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரதிக்ஷா என்ற மனைவி உள்ளார். கடந்த இரு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நிஷாந்த்குமாரிடம் பேச வேண்டும் என கூறி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இருவர் அவரை ஜிபி சிக்னல் அருகே வர வைத்து தாக்கியுள்ளனர். இப்பபுகாரின் பேரில் காட்டூர் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
News November 3, 2025
கோவையில் பெண்களுக்கு தடையா? எச்சரிச்கை!

கோவை, காரமடை எல்லை கருப்பராயன் கோயிலில் நவ.4 ஆம் தேதி பவுர்ணமி பூஜை நடைபெற உள்ளது. இதில் 10,008 பெண்கள் கலந்து கொள்ளும் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. பூஜையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார். பூஜையில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இது தவறான செய்தி. வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
News November 3, 2025
இந்திய துணை ஜனாதிபதி கோவை வருகை

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வரும் (நவம்பர்.4) செவ்வாய் அன்று கோவை மாவட்டத்திற்கு வருகிறார். இவர் பிலிச்சி கிராமம் ஒண்ணியபாளையத்தில் உள்ள எல்லை கருப்பராயன் கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள உள்ளார். திருவனந்தபுரத்திலிருந்து மாலை 5.55 மணிக்கு விமானம் மூலம் கோவை வந்து, 7.35 மணிக்கு ராய்ப்பூருக்கு புறப்படவுள்ளார்.


