News April 25, 2025

கோவைக்கு வரும் விஜய்! 

image

தவெக பூத் கமிட்டி மாநாடு நாளை ஏப்.26, நாளை மறுநாள் ஏப்.27 ஆகிய தேதிகளில் கோவை, குரும்பபாளையம் தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து நாளை காலை 08:30 மணியளவில், கோவை விமானம் நிலையத்திற்கு வருகை தர உள்ளார். எனவே, அவரை வரவேற்பதற்காக, கோவை மாவட்ட தவெக கட்சி செயலாளர்கள் சார்பாக, நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 20, 2025

கோவை: 6-ம் வகுப்பு படித்த போலி டாக்டர் கைது!

image

கோவை, சூலூர் அருகே சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜெ. கிருஷ்ணாபுரத்தில் சூலூர் மருத்துவமனை மருத்துவர் கஜேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 6ஆம் வகுப்பு படித்த முத்துலட்சுமி என்பவர் கிளினிக் நடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும், அவரிடம் இருந்து ஆங்கில மருந்துகள் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

News November 20, 2025

கோவை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

கோவை மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக்<<>> செய்து Grievance Redressal, சேலம் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க!

News November 20, 2025

கோவை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!