News February 13, 2025

கோவைக்கு கலெக்டர் பொறுப்பேற்பு 

image

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியராக பவன் குமார் க.கிரியப்பனவர் பொறுப்பேற்று உள்ளார். 2016ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணிக்கு தேர்வான இவர் முதல்முறையாக கடந்த 2017ஆம் ஆண்டு திருவள்ளுர் மாவட்டத்தில் உதவி மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். அதன் பிறகு பல்பேறு பொறுப்பகளில் இருந்த அவர் இன்று கோவை கலெக்டராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற பின் பேசுகையில், அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதாகவும் தெரிவித்தார். 

Similar News

News April 25, 2025

6 மாதத்திற்கு உள்ளே வரக்கூடாது: கமிஷனர்

image

கோவையில் குற்றச்சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில், அடிதடி, வழிப்பறி, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை செய்து வரும் ரவுடிகளை கண்டறிந்து 6 மாதங்களுக்கு மாநகரை விட்டு வெளியேற்ற மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, தற்போது 29 ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் 6 மாதங்களுக்கு, கோவை மாநகர பகுதிக்குள் வர தடை விதித்து உத்தரவிட்டார்.

News April 24, 2025

கோவையில் ரயில் சேவைகள் மாற்றம்

image

கோவை ரயில்வே துறை அதிகாரிகள் இன்று வெளியிட்ட அறிக்கையில், இருகூர் ரயில்வே யார்டில் தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் நடைபெறுவதால் ஏப்ரல் 26, 28 ஆகிய தேதிகளில், ரயில் சேவையில் மாற்றம், அதில் திருச்சிராப்பள்ளி சந்திப்பு – பாலக்காடு ரயில் மதியம் 13.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சூலூர் சாலையில் நிறுத்தப்படும் என்றனர்.

News April 24, 2025

கோவை: சொகுசு கார்களுடன் தலைமறைவான யூடியூபர்

image

கோவை கணபதி பாரதி நகரை சேர்ந்தவர் வினோத் குமார். இவர் பிரபல பால் பண்ணையில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் மணியக்காரன்பாளையத்தை சேர்ந்த யூடியூபர் சந்தோஷ் குமார் என்பவர் பழக்கமாகியுள்ளார். அப்போது, அவரிடம் ஆடி, பென்ஸ் கார்களை சரி செய்து தருவதாக கூறி காரையும், ரூ.3.70 லட்சத்தையும் பெற்று தலைமறைவானார். இப் புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!