News April 5, 2025
கோவில் அருகே சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு

சிவகாசி அருகே நாரணாபுரம் பகுதியில் நேற்று (ஏப்ரல்-04) போலீசார் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து சோதனை நடத்தினர். அப்போது தவ முனிஸ்வரர் கோயில் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட தங்கேஸ்வரன் (29), தங்கப்பாண்டி (30) ஆகிய இருவரை சிவகாசி கிழக்கு போலீசார் கைது செய்து அங்கிருந்த சுமார் 10,000 ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 8, 2026
விருதுநகர் அருகே ஒருவர் எரித்துக் கொலை?

விருதுநகர் ஆத்துப்பாலம் அருகே நேற்று இரவில் அடையாளம் தெரியாத ஆண் உடல் எரிந்த நிலையில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அல்லம்பட்டியை சேர்ந்த பொன்ராஜ்(32) தனது நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் பொன்ராஜை அடித்து கொலை செய்து தீ வைத்து எரித்திருக்கலாம் என கூறப்படும் நிலையில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 8, 2026
விருதுநகர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

விருதுநகர் மக்களே இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு <
News January 8, 2026
விருதுநகரில் பரபரப்பு….. எரிந்த நிலையில் உடல் மீட்பு

விருதுநகர் ஆத்துப் பாலம் அருகே நிறைவாழ்வு நகர் சர்ச் எதிரே நீர்வரத்து ஓடையில் நேற்று இரவு 7:00 மணிக்கு அடையாளம் தெரியாத ஆண் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. பஜார் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படும் போலீசார் அவரது பெயர், விபரம் குறித்து விசாரிக்கின்றனர்.


