News August 18, 2024
கோவில்பட்டி வழியாக வேளாங்கண்ணிக்கு ரயில் சேவை

திருவனந்தபுரத்திலிருந்து கோவில்பட்டி வழியாக வேளாங்கண்ணிக்கு வருகின்ற ஆகஸ்ட் 21, 28 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய நாட்களில் ஒவ்வொரு புதன்கிழமை சிறப்பு ரயில் (வ.எண்: 06115) இயக்கப்படுகிறது. வேளாங்கண்ணியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு, ஆகஸ்ட் 22, 29 மற்றும் செப்டம்பர் 05 ஆகிய தினங்களில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறுமும் (வ.எண்: 06116) இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நேற்று காலையில் துவங்கியது.
Similar News
News November 21, 2025
தூத்துக்குடி மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (நவ. 21) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகபட்டினம், இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுபற்றி தெரியாதவர்களக்கு SHARE செய்து உதவுங்க.
News November 21, 2025
தூத்துக்குடி: தேர்வு இல்லை.. வானிலை மையத்தில் வேலை ரெடி

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.29,200 – ரு.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க <
News November 21, 2025
தூத்துக்குடியில் இளம்பெண் தற்கொலை! கடிதம் சிக்கியது

தூத்துக்குடி சகாயபுரத்தை சேர்ந்தவர் பெனோ. இவரது மனைவி ஜெமீலா. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் தான் ஆகின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக ஜெமிலா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில், ஜெமீலா, தாயாருக்கு எழுதிய எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக தென்பாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


