News April 24, 2025
கோவில்பட்டியில் 200 பண்ணை குட்டைகள் திட்டம்

கோவில்பட்டி வேளாண் உதவி இயக்குனர் மணிகண்டன் நேற்று விடுத்துள்ள செய்தியில், விவசாய நிலங்களில் பண்ணைகள் அமைக்க அரசு ரூ.1 லட்சம் மானியம் வழங்குகிறது. அந்த வகையில் கோவில்பட்டி வட்டார பகுதிகளில் 200 பண்ணை குட்டைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்கள் நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் உதவி வேளாண் அலுவலர் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
தூத்துக்குடி: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

தூத்துக்குடி மக்களே நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 5, 2025
தூத்துக்குடி: கொலை குற்றவாளி சமூக சேவை செய்ய உத்தரவு

குளத்தூர் அருகே உள்ள வைகுண்ட பெருமாள்புரத்தை சேர்ந்த சுப்பையா என்பவர் கடந்த 2008-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் இளம் சிறார் ஒருவருக்கு 17 ஆண்டுகளுக்குப் பின், நேற்று தூத்துக்குடி இளம் சிறார் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சமூக சேவை செய்ய உத்தரவிட்டது.
News December 5, 2025
தூத்துக்குடி: கம்பால் அடித்து கொலை.. 2 பேருக்கு ஆயுள்

ஆறுமுகநேரி அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்தவர் அந்தோணிசூசை ராஜ். இவரை கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிலிவிங்ஸ்டன், அன்றோ ஆகியோர் முன் விரோதம் காரணமாக கம்பில் அடித்து கொலை செய்தனர். இது பற்றி திருச்செந்தூர் போலீசார் இருவர் மீதும் தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் அன்றோ, அந்தோணி லிவிங்ஸ்டன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


