News April 18, 2025
கோவிலில் சிலை திருடிய பெண் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே கைனூரில் உள்ள காட்டுப்பிள்ளையார் கோயிலில் வெண்கல மாணிக்கவாசகர் சிலை மற்றும் பூஜைப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஜனனி (30) என்பவர் நேற்று (ஏப்ரல்.17) கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸாரிடமிருந்து தப்பியோடினார். சுமார் 3 மணி நேர தேடலுக்குப் பின் பொய்ப்பாக்கம் பகுதியில் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
Similar News
News November 17, 2025
ராணிப்பேட்டை: B.E/B.Tech படித்தால் ரூ50,000!

ராணிப்பேட்டை: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 17, 2025
ராணிப்பேட்டை: கூட்டணி குறித்து ராமதாஸ் அறிவிப்பு!

ராணிப்பேட்டை: நெமிலியில் நேற்று(நவ.16) நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ‘2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக கூட்டணி குறித்து வரும் டிசம்பரில் முடிவு எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார். பெண்கள் மீதான வன்முறை, போதைப் பிரச்சனை, ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இதில் பேசப்பட்டன.
News November 17, 2025
ராணிப்பேட்டையில் மின் தடை அறிவிப்பு

ராணிப்பேட்டை: ஆற்காடு கோட்டத்திற்குட்பட்ட பாம்பாக்கம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (18.11.2024) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு மற்றும் தட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


