News September 14, 2024

கோவளம் ஹெலிகாப்டர் திட்டத்துக்கு அன்புமணி எதிர்ப்பு

image

சென்னையை அடுத்த கோவளம் கடற்கரை பகுதியில், ஒரு தனியார் நிறுவனம் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவையை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “சுற்றுச்சூழலுக்கும், பறவைகள் வருகைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்தை கைவிட வேண்டும். சுற்றுலா வளர்ச்சியைவிட, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகவும் அவசியம்” என்று கூறியுள்ளார்.

Similar News

News November 26, 2025

சென்னை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். எல்லோரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News November 26, 2025

சென்னை: குடும்ப பிரச்னையில் உயிரை மாய்துகொண்ட பெண் போலீஸ்!

image

அண்ணா நகர் போக்குவரத்து காவல்துறையில், கார்த்திகா ராணி (30) என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு குழந்தைகளோடு தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை தகராறு ஏற்ப்பட்ட நிலையில், டி.பி சத்திரம் காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News November 26, 2025

சென்னை: பொதுவெளியில் பெண்களிடம் ஆபாச சைகை

image

சென்னை வேளச்சேரி பேருந்து நிலையத்தில் நேற்றிரவு பேருந்துக்காக காத்திருந்த பெண்களிடம், பாலியல் ரீதியாக ஆபாச செயலில் ஈடுபட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்து, உ.பியை சேர்ந்த மகேஷ் குமார் என்பவரை நேற்று கைது செய்தனர். அவர் சென்னை நகரில் உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது.

error: Content is protected !!