News April 10, 2025
கோழி, ஆட்டு பண்ணை அமைக்க தொழில்முனைவோருக்கு மானியம்

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் அறிவித்ததன்படி, தேசிய கால்நடை இயக்க தொழில்முனைவோர் திட்டத்தில் கோழி, ஆட்டு, பன்றி பண்ணைகள் அமைக்க அரசு நிதியுதவி வழங்குகிறது. இறைச்சி, முட்டை உற்பத்தி உயர்ந்து, வேலைவாய்ப்பு அதிகரிக்கும். விண்ணப்பிக்க https://nlm.udyamimitra.in-ல் பதிவு செய்யலாம். இது குறித்து கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
திருவள்ளூர்: செங்கல் சூளையில் மர்மச்சாவு!

ஆரணி அடுத்த போந்தவாக்கம் செங்கல் சூளையில் வேலை செய்து வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விதேசி (49) மர்மமான முறையில் தனது அறையில் உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய ஆரணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருவள்ளூர் ரயில்வே சுரங்கப்பாதையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். உயிரிழந்தவர் யார் என ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
News December 3, 2025
திருவள்ளூர்: அடுத்தடுத்து 2 வீட்டில் கொள்ளை!

திருவாலங்காடு ஒன்றியம் அரிசந்திராபுரம் கிராமத்தில், வெளியூர் சென்றிருந்த 4 வீடுகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்தனர். இதில் இரண்டரை பவுன் தங்க நகைகள், ரூ.10,000 மற்றும் வெள்ளிக் கொலுசு திருடப்பட்டன. மேலும், பூண்டி ஒன்றியத்தில் நெற்களம் அமைக்கும் பணியில் இருந்த 500 கிலோ இரும்பு கம்பிகளும் திருடு போயின. அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
News December 3, 2025
திருவள்ளூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

‘டிட்வா’ புயல் காரணமாக இன்றும் (டிச.3) திருவள்ளூரில் பெய்து வரும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, திருவள்ளூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


