News August 3, 2024
கோழிப்பண்ணை வைக்க 50% மானியம்

விழுப்புரத்தில், சிறிய அளவிலான (250 கோழிகள்) 100 நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவ, 50% மானியம் வழங்கப்பட உள்ளது. குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கட்டுமானச் செலவு. உபகரணங்கள், தீவன செலவு என 50% மானியம் (ரூ. 1,56,875/-) மாநில அரசால் வழங்கப்படும். பயனாளிகள், அரசு கால்நடை மருத்துவமனையை அல்லது கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News September 16, 2025
விழுப்புரத்தில் இன்று கரண்ட் கட்!

விழுப்புரம் மாவட்டம், பூதமேடு துணைமின் நிலையத்தில் இன்று (செப்.,16) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி, சோழங்கனூர், சோழம்பூண்டி, எடப்பாளையம், அரியூர், வெங்கந்தூர், ஆத்தனூர், பூதமேடு, ஒரத்தூர், சாணிமேதூர், தென்னமாதேவி, திருவாமாத்தூர், அயன்கோவில்பட்டு & அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News September 16, 2025
விழுப்புரத்தில் உள்ளவர்களுக்கு குட் நியூஸ்!

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <
News September 16, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் செப்.15 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.