News June 26, 2024
கோயில் திருவிழாவில் இளைஞர் வெட்டிக்கொலை

சோளிங்கர் அடுத்த கரிக்கன் தாங்கல் கிராமத்தில் கங்கை அம்மன் திருவிழா நேற்று இரவு நடந்தது. இதில் அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் மற்றும் சிலருக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. தேவராஜ் (30) கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவருக்கு செண்பகம் என்ற மனைவியும், 7 மற்றும் 4 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 16, 2025
ராணிப்பேட்டை: சைபர் கிரைம் எண்களை தெரிஞ்சிக்கோங்க

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்.
News September 16, 2025
ராணிப்பேட்டை: ஆதார் கார்டில் இதை செய்து விட்டீர்களா?

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <
News September 16, 2025
ராணிப்பேட்டையில் ஒரு அதிசய கோயில்

ராணிப்பேட்டை மாவட்ட சோளிங்கரில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில் உள்ளது. இறைவன் 24 நிமிடங்களுக்குள் அவதரித்ததால், இந்த மலையில் 24 நிமிடம் பிரார்த்தனை செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், கணவன்- மனைவி இடையே சண்டை சச்சரவு என எதுவும் இல்லாமல் குடும்ப ஐஸ்வர்யம் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தெரிந்த தம்பதிகளுக்கு ஷேர் பண்ணுங்க.