News February 17, 2025
கோயில் குளத்தில் குளிக்க சென்றவர் உயிரிழப்பு

சென்னசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மாதவன் (40) என்பவர் இன்று அங்குள்ள சாமுண்டீஸ்வரி கோயில் குளத்தில் குளிக்க சென்றார். அப்போது கால் தவறி வழுக்கி குளத்தில் விழுந்ததில், மூச்சு திணறி உயிரிழந்தார். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
Similar News
News July 11, 2025
இரவு ரோந்து பணி செல்லும் போலீசார் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை பாணாவரம், தக்கோலம், திமிரி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்.
News July 10, 2025

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டையில் வருகின்ற ஜூலை 19 சனி காலை 8:30 முதல் மாலை 3 மணி வரை தென்கடப்பந்தாங்கலில் உள்ள, ராணிப்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 200-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் சுமார் 10,000 தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும் விபரங்களுக்கு இந்த (9488466468, 9952493516) எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க