News February 17, 2025
கோயில் குளத்தில் குளிக்க சென்றவர் உயிரிழப்பு

சென்னசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மாதவன் (40) என்பவர் இன்று அங்குள்ள சாமுண்டீஸ்வரி கோயில் குளத்தில் குளிக்க சென்றார். அப்போது கால் தவறி வழுக்கி குளத்தில் விழுந்ததில், மூச்சு திணறி உயிரிழந்தார். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
Similar News
News December 1, 2025
ராணிப்பேட்டை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்…!

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு <
News December 1, 2025
ராணிப்பேட்டை: கம்மல் அறுத்து கொள்ளை.. மூதாட்டி பலி!

அக்ராவரம் மலைமேடு கிராமத்தைச் சேர்ந்த சாலம்மாள்(70). இவர் வீட்டில் தனியாக வசித்து வரும்போது கடந்த 26ஆம் தேதி இவரது காதுகளில் இருந்த கம்மல்களை கத்தியால் அறுத்து திருடன் கொள்ளையடித்து சென்றான். அதைத் தொடர்ந்து சாலம்மாள் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று டிச.1ம் தேதி அதிகாலை சாலம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தை சிப்காட் போலீசார் விசாரிக்கிறனர்.
News December 1, 2025
ராணிப்பேட்டை: 2,147 செவிலியர் பணியிடங்கள்.. நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


