News April 10, 2025
கோயில் கட்டுமான பணியின் போது தவறி விழுந்து தொழிலாளி பலி

மானூர் அருகே நாஞ்சான்குளம் பகுதியில் உள்ள பழமையான கோவிலில் கட்டுமான பணிகள் நடந்து வந்தது. கடந்த 3-ம் தேதி கட்டிட தொழிலாளியாக பணியாற்றிய அதே ஊரைச் சேர்ந்த பாஸ்கர் சுமார் 12 அடி உயரமுள்ள கட்டிடத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்-09) உயிரிழந்தார். மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 20, 2025
நெல்லை: மின் கம்பத்தில் மோதி புது மாப்பிள்ளை பலி

திருப்புடைமருதூரை சேர்ந்தவர் சங்கர் (29). இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு பணிபுரிந்து பைக்கில் வீட்டிற்கு சென்ற போது வெள்ளாங்குழி உப்பூர் பகுதியில் மின் கம்பத்தில் பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 20, 2025
பாளையங்கோட்டையில் விசாரனை கைதி தற்கொலை

ஆய்க்குடியை சேர்ந்த திருமலை குமார் போக்சோ வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்த நிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மது போதையில் பெற்ற மகளிடம் தவறாக நடந்து கொண்டதாக மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் கைதாகி திருமலை குமார் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
News November 19, 2025
நெல்லை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நெல்லை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 28ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில் நெல்லை மாவட்ட விவசாயிகள் கலந்து கொள்ளலாம். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதில் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.


