News April 15, 2024

கோயில்களில் சிறப்பு வழிபாடு

image

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நேற்று புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில், புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயில், தெற்கு 4-ஆம் வீதி ஆஞ்சனேயர் கோயில், மேலராஜ வீதியிலுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயில், குமரமலை பாலதண்டாயுதபாணி கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News

News May 7, 2025

புதுக்கோட்டை மக்கள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்கள்

image

கோடைகாலம் நெருங்கும் நிலையில் மின்சார துண்டிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு ஏதேனும் உங்கள் பகுதிகளில் ஏற்பட்டால் மின்சாரம் தொடர்பாக அறிந்து கொள்ள இந்த எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ▶செயற் பொறியாளர் O&M அறந்தாங்கி-04371-271650, ▶செயற் பொறியாளர் O&M கீரனூர்-04339-263330, ▶செயற் பொறியாளர் O&M திருமயம்-04333-274238, ▶செயற் பொறியாளர் புதுக்கோட்டை-04322-221870. உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News April 30, 2025

செல்வத்தை அள்ளித் தரும் அட்சயபுரீஸ்வரர் கோவில்

image

பேராவூரணி அருகே விளங்குளத்தில் அட்சயபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சாமிக்கு விளக்கு ஏற்றி, சிறப்பு அபிஷேகம் செய்தால் நினைத்தது நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம். மேலும் இங்கு அட்சய திரிதியை நாளில் வேண்டினால் செல்வம் செழிக்கும், நீண்ட ஆயுள் பெருகும், கல்வி போன்றவற்றில் சிறக்கலாம் என்பது நம்பிக்கையாகும். அட்சய திரிதியை நாளில் உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் SHARE பண்ணுங்க

News April 30, 2025

சாலை விபத்தில் தொழிலாளி பலி

image

ராமகவுண்டம்பட்டி வடக்கிபட்டியைச் சேர்ந்தவர் அழகன், தொழிலாளியான இவர், மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் ராமகவுண்டம்பட்டி அருகே திங்கள்கிழமை சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் அழகன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அழகன் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!