News March 21, 2024
கோயம்புத்தூர் தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி.ஆர். நடராஜன் வெற்றிபெற்றிருந்தார். ஆனால், இந்த முறை இந்தத் தொகுதியில், பாஜக-விற்கு வாய்ப்புள்ளதால் திமுக-வே போட்டியிட முடிவு செய்தது. திமுக சார்பில், கணபதி பி. ராஜ்குமார் போட்டியிடவுள்ளார். இவர் 2014இல் கோயம்புத்தூரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து திமுக-வில் இணைந்தார்.
Similar News
News November 12, 2025
கோவை காவல்துறை எச்சரிக்கை!

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் இன்று வெளியிட்ட அறிக்கையில், கோவை மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 7 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 97 புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
News November 11, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (11.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
கோவை: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க


