News August 7, 2024

கோயம்புத்தூரில் மழைக்கு வாய்ப்பு

image

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கோயம்புத்தூரில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூரில் 5செமீ மழை பெய்து இருப்பது குறிப்பிடதக்கது.

Similar News

News November 16, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (16.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 16, 2025

கோவை வரும் பிரதமர் மோடி!

image

தென்​னிந்​திய இயற்கை விவ​சா​யிகள் கூட்​டமைப்பு சார்​பில் வரும் 19 – 21 ஆம் தேதி வரை 3 நாட்​களுக்கு கோவை கொடிசியா அரங்​கில், இயற்கை விவ​சா​யிகள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை பிரதமர் நரேந்​திர மோடி தொடங்​கி​வைத்து சிறப்புரையாற்றுகிறார். மேலும், சிறப்​பாக செயல்​பட்ட 18 விவ​சா​யிகளுக்கு பிரதமர் விருது வழங்​கு​கிறார். மாநாட்​டில் 50 ஆயிரத்​துக்கும் மேற்​பட்ட இயற்கை விவ​சா​யிகள் பங்கேற்கின்றனர்.

News November 16, 2025

கோவையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

image

கோவையில் வரும் 29 தேதி அன்று, தமிழ்நாடு அரசின் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், 250 தனியார் நிறுவனங்கள் பங்குபெறும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், வேலை தேடுபவர்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.

error: Content is protected !!