News May 16, 2024
கோபி அருகே தீக்குளிக்க முயன்ற விவசாயி

கொடிவேரி பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி விவசாயம் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 139 மஞ்சள் மூட்டைகள் குடோனில் வைத்ததாக சொல்கிறார். தற்போது மஞ்சள் மூட்டைகளை திருப்பி எடுக்க செல்லும் போது மஞ்சள் மூட்டைகளை வைத்தற்கான ஆதாரத்தை கூட்டுறவு செயலாளர் நடராஜ் கேட்டதால் மனமுடைந்த இவரும், மனைவி அஞ்சலி தேவி டீசலை மேலே ஊற்றி தற்கொலை முயற்சி செய்தனர்.
Similar News
News October 23, 2025
ஈரோடு மாவட்ட இரவு காவலர் ரோந்து பணி விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News October 22, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தல்!

நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களின் குழந்தைகள் ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
News October 22, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு

சாலையில் நடந்து செல்லும் போது செல்போன் பயன்படுத்த வேண்டாம். அது உங்களைச் சுற்றியுள்ள ஆபத்துக்களுக்கும், விபத்துக்களுக்கு வழிவகுக்கும். கவனக்குறைவாக நடந்து கொள்ளும்போது, வாகனங்கள், சைக்கிள்கள், மற்றும் 2 சக்கர வாகனங்கள் மீதான கவனம் சிதறலாம். செல்போனைப் பயன்படுத்துவதால், தெருக்களையும் கடக்கும்போது விபத்துக்கள் ஏற்படும் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.