News October 24, 2024

கோபி அரசு ஐடிஐயில் புதிய தொழில் பிரிவில் சேர கால நீட்டிப்பு

image

கோபி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய தொழில் பிரிவில் சேர அக்.30ம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மெக்கானிக் எலக்ட்ரிக் வீக்கில்ஸ், இண்டஸ்ட்ரியல் ரோபோட்டிக் மற்றும் டிஜிட்டல் மேனுஃபாக்சரிங் டெக்னீசியன் என 2 புதிய பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு 70108-75256 எண்ணில் தொடர்புகொள்ளவும்.

Similar News

News November 22, 2025

அந்தியூரில் பெண்ணிடம் பணம் பறித்த இருவர் கைது!

image

அந்தியூர் கொல்லம்பாளையம் சுரேஷ் என்பவர் மனைவியிடம் திருவண்ணாமலையை சேர்ந்த பிரியங்கா,செல்வத்துரை ஆகிய இருவர், குழந்தை பிறக்கும் மாத்திரை என கொடுத்துள்ளனர். மாத்திரை சாப்பிட்ட சுரேஷின் மனைவி மயக்கம் அடைந்த நிலையில் இருவரும் அவரிடம் இருந்த ரூ.25000 பணத்தை எடுத்து தப்பி விட்டனர். இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியங்கா,செல்வத்துரை ஆகிய இருவர் கைது செய்தனர்.

News November 22, 2025

ஈரோடு: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று 21-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நடைபெற்றது. இதில் விவசாய பெருமக்களிடமிருந்து கோரிக்கைகளை மனுக்களாக பெற்ற, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News November 22, 2025

ஈரோடு: போலி டிஜிட்டல் திருமண அழைப்பிதழ் மோசடி!

image

ஈரோடு காவல்துறை சார்பாக அறிவுரை அழைப்பிதழ்களை வாட்ஸ்அப்பில் கோப்புகளாக மக்களுக்கு அனுப்புகின்றனர். இது போன்ற கோப்புகளை பதிவிறக்குவதன் மூலம் உங்கள் மொபைலில் மால்வேர் வைரஸைக் கொண்டு வருகின்றனர். பின்னர் சைபர் குற்றவாளிகள் உங்களின் அனைத்து தகவல்களையும் திருடுகின்றனர்.தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ்அப்பில் திருமண அழைப்பிதழ் வந்தால், அதை கிளிக் செய்ய வேண்டாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுரை!

error: Content is protected !!