News April 23, 2025
கோத்தகிரி: விபத்தில் ஒருவர் பலி!

கோத்தகிரி, கன்னேரிமுக்கு கிராமத்தில், மேற்கு வங்கத்தை சேர்ந்த உமேஷ் தமாங்(வயது 35) என்பவர் வசிக்கிறார். துரித உணவகத்தில் பணி புரிந்து வந்த இவர், நேற்று மாலை தனது நண்பருடன், வேறு வேலை தேடுவதற்காக, ஸ்கூட்டரில் கப்பட்டி கிராமத்திற்கு தாழ்வான சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர், மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
Similar News
News December 5, 2025
நீலகிரி மக்களே முக்கிய அறிவிப்பு!

நீலகிரி கோட்ட அளவிலான தபால் குறை தீர்ப்பு கூட்டம், வரும் 8ம் தேதி காலை 10:00 மணிக்கு, நீலகிரி தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. பொது அஞ்சல் அலுவலகத்தினால் அளிக்கப்படும் அஞ்சலக சேவைகள் குறித்து ஆலோசனைகள், குறைகள் ஏதேனும் இருப்பின் வாடிக்கையாளர்கள் அதன் விவரங்களை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கலாம்
News December 5, 2025
நீலகிரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News December 5, 2025
நீலகிரி: வாக்காளர் பட்டியல் விபரங்கள்! EASY WAY

நீலகிரி மக்களே வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <


