News August 16, 2024

கோதகிரியில் மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பலி

image

கோதகிரியில் தாழ்வாக இருந்த உயர் மின்கம்பியில் உரசி அரசு பேருந்து ஓடுநர் உயிரிழப்பு. உதகையில் தாழ்வாக உயர் மின்அழுத்த கம்பி ஒன்று அறுந்து கிடந்தது. அதிக மேகமூட்டம் காரணமாக கீழ் இருந்த மின்கம்பி தெரியாமல் இருந்ததால் அதின் மேல் நின்ற ஓட்டுநர் மீது மின்சாரம் பாய்ந்ததால் தூக்கி வீசப்பட்டு பலியாகினார்.

Similar News

News November 24, 2025

நீலகிரி வரலாற்றில் இன்று மறக்க முடியாத நாள்

image

குன்னூர் நகரில் 1978 ஆண்டு நவம்பர் மாதம் இதே 24 தேதி பகல் நேரத்தில் வரலாறு காணாத அளவில்  சுமார் 2 மணி நேரத்தில் 500  மி.மீட்டர் மழை பெய்தது . அதில் ஆற்றில் வெள்ள பெருக்கு  ஏற்பட்டது. மார்க்கெட் , வி.பி. தெரு , கிருஷ்ணாபுரம் , பரசுராமன் தெரு , வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது . 500 கடைகள் நீரில் முழ்கின.  நீலகிரி வரலாற்றில் நவம்பர் 24 தேதி மறக்க முடியாத நாளாகும்.

News November 24, 2025

நீலகிரியை சேர்ந்தவருக்கு அரசு விருது

image

நூலகத் தந்தை எனப் போற்றக்கூடிய ரெங்க நாதன் அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நல் நூலகர் விருதும் பரிசுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. குன்னூர் அதிகரட்டி கிளை நூலகத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு நல் நூலகர் விருது வழங்கப்பட்டுள்ளது இவ்விருதிணை தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வழங்கினார்.

News November 24, 2025

BREAKING கூடலூர் அருகே புலி தாக்கி பெண் பலி

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்த பழங்குடியின பெண் புலி தாக்கி உயிரிழப்பு. மேலும் உயிரிழந்த அப்பெண்ணின் உடலானது ஆற்றங்கரையோரம் மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெண்ணை கொன்ற புலியை உடனடியாக பிடிக்க கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!