News April 10, 2025

கோட்டூர் அருகே மின்னல் தாக்கியதில் வீடு எரிந்து சேதம்

image

திருவாரூர் மாவட்டம், கோட்டூரில் நேற்று இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதில் சேந்தமங்கலம் மேலத்தெரு ஊராட்சியில் முருகானந்தம் என்பவருடைய கூரை வீட்டில் மின்னல் தாக்கியதில் வீடு தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. மேலும் வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளியான பிரகதீஷ் என்பவருக்கும் முழங்கால் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. குறித்து விக்கிரபாண்டியம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News December 14, 2025

திருவாரூர்: வனத்துறையினரால் 5 பேர் கைது

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கலத்தில் இருந்து எடுக்கப்படும் வாசனை திரவியம் தயாரிக்க பயன்படும் பொருள் கைப்பற்றப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து கடத்திவரப்பட்டதை சதீஷ், பாலமுருகன், முருகானந்தம், விவேகானந்தம், ஆனந்தராஜ் என ஐந்து பேர் 2.7 கிலோ எடை கொண்ட 2.5 கோடி மதிப்பிலான கட்டிகளை விற்க முயன்ற போது வனத்துறையினர் கண்டறிந்து கைது செய்தனர்.

News December 14, 2025

திருவாரூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News December 14, 2025

திருவாரூர்: வேளாண் அலுவலகம் முற்றுகை அறிவிப்பு

image

மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பாரபட்சம் என்று முழுமையாக நிவாரணம் வழங்கிட கோரி வேளாண்மை துறை அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

error: Content is protected !!