News May 17, 2024
கோடை பண்பாட்டு பயிற்சி முகாம்!!

மதுரை ஹார்விபட்டி சுவாமி விவேகானந்தர் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில், 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கோடை பண்பாட்டு பயிற்சி முகாம் இளைய பாரதம் சேவா அறக்கட்டளை சார்பில் வரும் மே 24 முதல் 26 வரை நடக்கவுள்ளது. இதில், வேத கணிதம், பேச்சுப் பட்டறை, ஓவியம் வரைதல், தனிநபர் ஆளுமைத் திறன் பயிற்சி, யோகா, தியானம், களப்பயணம், விளையாட்டு, உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
Similar News
News December 8, 2025
மதுரை அருகே எத்தனால் லாரி கவிழ்ந்து விபத்து

திருமங்கலம் கப்பலுார் சிட்கோ தொழில்பேட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு எத்தனால் ஏற்றி வந்த லாரி ஒன்று சேமிப்பு கிடங்கு வாயில் அருகே கால்வாய்க்குள் கவிழ்ந்தது. நாமக்கல்லில் இருந்து 40 ஆயிரம் லிட்டர் எத்தனாலை ஏற்றி வந்த லாரி சேமிப்பு கிடங்கின் சுற்றுச்சுவர் மீது சாய்ந்தது. திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள் மூன்று கிரேன்கள் மூலம் 8 மணி நேரத்திற்கு பிறகு மீட்டனர்.
News December 8, 2025
மேலூர் அருகே கைதான போலீஸ் தலை மறைவு

மதுரை நரசிங்கம்பட்டி பாண்டி குமார் 35 திருமயத்தில் போலீசாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு போலீஸ்காரர் டூவீலரில் புதுச்சேரி மது பாட்டில்களை கடத்திய போது, சின்னமந்தையன் செக்கடி பகுதியில் போலீசார் பாண்டி குமாரை கைது செய்து டூவீலர், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறிய போலீஸ்காரர் கூறவே, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு தப்பினார். மேலூர் போலீசார் தேடுகின்றனர்.
News December 8, 2025
மதுரை: ரயில்வே துறையில் ரூ.42,478 சம்பளத்தில் வேலை!

மதுரை மக்களே, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணிகளுக்கான அ|றிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 40 வயதுகுட்பட்ட B.E/B.Tech, B.Pharm படித்தவர்கள் டிச.25க்குள் இங்கு <


