News April 4, 2024
கோடை நீச்சல் பயிற்சி அறிவிப்பு

மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு : பாளை அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளம் மற்றும் சீவலப்பேரி ரோடு கக்கன் நகர் நீச்சல் குளங்களில் 5 பிரிவுகளாக 12 நாட்கள் வீதம் ஏப்ரல் மே மாதங்களில் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி கட்டணம் ரூ.1770 . மேலும் விவரங்களுக்கு 74017 03506 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News April 20, 2025
நெல்லை: சின்னத்துரையை தாக்கிய இருவர் சிக்கினர்

நாங்குநேரியில் ஜாதி வன்மத்தால் தாக்கப்பட்ட மாணவர் சின்னத்துரை மீது சமீபத்தில் மீண்டும் தாக்குதல் நடைபெற்றது. மர்ம நபர்கள் இன்ஸ்டாகிராமில் பழகி அவரை கொக்கிரகுளம் வசந்தம் நகர் பகுதிக்கு வரவழைத்து தாக்கியது தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் பாளையங்கோட்டை போலீசார் இன்று சங்கரநாராயணன் சக்திவேல் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாகவும் மேலும் இருவரை தேடி வருவதாகவும் மாநகர காவல் துறை இன்று தெரிவித்துள்ளது.
News April 19, 2025
நெல்லை: இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*
News April 19, 2025
திருநெல்வேலியில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்

▶️மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி
▶️களக்காடு முண்டந்துறை சரணாலயம்
▶️பாபநாசம் அகஸ்தியர் அருவி
▶️மாஞ்சோலை
▶️நெல்லை வனவிலங்கு சரணாலயம்
▶️காரையார் அணை
▶️நெல்லையப்பர் கோயில்
▶️பனதீர்த்தம் அருவி