News April 15, 2025
கோடை காலத்தில் குடிக்க வேண்டிய பானங்கள்

நாகை மக்களே கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க இந்த பானங்களை மட்டும் அருந்துங்கள். இளநீர், மோர், பானகம், தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொண்டால் உடல் நீர்ச்சத்தோடு ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாமல் உடலுக்கு கேடு விளைவிக்கும் குளிர் பானங்களை அருந்த வேண்டாம். எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News November 17, 2025
நாகை: மழையா? இதை மறக்காதீங்க!

நாகை மக்களே, தமிழகத்தில் பருவமழை தொடங்கி தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மழையால் பவர் கட், மின்கம்பி அறுந்து விழுவது, பியூஸ் போவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். ‘94987 94987’ என்ற மின்வாரிய உதவி எண்னை தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், தமிழகத்தில் எங்கு இருந்தாலும் பழுது நீக்கி தரப்படும்! SHARE
News November 17, 2025
நாகை: ஆற்றில் மூழ்கிய மாணவன் பிணமாக மீட்பு

நாகை மாவட்டம், அம்பல் ஊராட்சி, பொறக்குடி குணர் பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் இளங்கேஸ்வரன் (17). இவர் பேரளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அரசற்றில் நண்பர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, தண்ணீரில் மூழ்கி மாயமாகியுளார். இந்நிலையில் 24 மணி நேர தேடுதலுக்கு பிறகு இளங்கேஸ்வரனை தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டனர்.
News November 17, 2025
BREAKING: நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.17) ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.


