News April 15, 2025
கோடை காலத்தில் குடிக்க வேண்டிய பானங்கள்

சிவகங்கை மக்களே கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க இந்த பானங்களை மட்டும் அருந்துங்கள். இளநீர், மோர், பானகம், தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொண்டால் உடல் நீர்ச்சத்தோடு ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாமல் உடலுக்கு கேடு விளைவிக்கும் குளிர் பானங்களை அருந்த வேண்டாம். *எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க*
Similar News
News October 30, 2025
சிவகங்கை: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

சிவகங்கை மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். <
News October 30, 2025
சிவகங்கை அருகே விபத்து அபாய சாலை

ஓசாரிபட்டி, சதுர்வேதமங்கலம், முறையூர், ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான புள்ளிமான்கள் திரிகின்றன. இவை தண்ணீர், இரை தேடி கிராமப் பகுதிகளுக்குள் வருவது வழக்கம். அப்படி வரும்போது நாய்கள் விரட்டும் பட்சத்தில் சாலையின் குறுக்கே தாவி ஓடும். டூவீலர்களில் வரும் வாகன ஓட்டிகளின் தலை உயரத்திற்கு தாவுகின்றன. இதனால் பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.
News October 30, 2025
சிவகங்கை: டிஜிட்டல் கைது; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

“டிஜிட்டல் கைது” என்று மிரட்டும் அழைப்புகள் போலியானவை. யாருக்கும் டிஜிட்டல் கைது அதிகாரம் இல்லை. போலி போலீஸ்,சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி பணம் கேட்பது, “உயர் நீதிமன்ற உத்தரவு”, “வங்கி முடக்கம்” என்று மிரட்டி பணம் கேட்பவர்களைப் புறக்கணிக்கவும், தனிப்பட்ட வங்கி தகவல்கள் பகிர வேண்டாம், பணம் அனுப்ப வேண்டாம், மோசடி அழைப்புகள் வந்தால் 1930 சைபர் கிரைக்கு புகாரளிக்க சிவகங்கை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


