News April 23, 2025
கோடையிலும் வற்றாத அங்குத்தி நீர் வீழ்ச்சி

கிருஷ்ணகிரி, கெடகானூர் கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அங்குத்தி நீர் வீழ்ச்சியில், வற்றாத அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வற்றாத நீர் நிலையாக ஐந்து நீர் நிலைகள் இதில் உள்ளது. ஜவ்வாது மலையில் நிறைந்துள்ள மூலிகை செடிகளின் ஊடே வரும் அங்குத்தி அருவி நீர் நோய்களை தீர்க்கும் தன்மைகளைக் கொண்டுள்ளது. பார்வையாளர்களிடம் நுழைவு கட்டணமாக ₹30 வசூலிக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க மக்களே!
Similar News
News November 25, 2025
கிருஷ்ணகிரி: தாய் சொன்ன வார்தையால் மனமுடைந்த சிறுமி தற்கொலை

காவேரிப்பட்டினம் அடுத்த ஜோதிபுரம் பகுதியில் சேர்ந்த 14 வயது சிறுமி திவ்யா. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். திவ்யாவிடம் தாய் சுசிலா வீட்டு வேலைகளை செய்யுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி திவ்யா வீட்டில் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நேற்று காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
News November 25, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (நவ.24) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
3 வயது குழந்தையுடன் தாய் மாயம்

கல்லாவி அடுத்த ஊமைகவுண்டன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தாமரை செல்வன். இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு 3 வயதில் இனியன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி தேன்மொழி தனது மகன் இனியனுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தாமரைசெல்வன் கொடுத்த புகாரின் பேரில் கல்லாவி போலீசார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.


