News April 22, 2025
கோடைகால பயிற்சி முகாம்: கலெக்டர்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், வரும் ஏப்ரல் 25 முதல் மே 15ஆம் தேதி வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும் 25ஆம் தேதி காலை 6 மணியளவில் நேரிலோ அல்லது 7401703483 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யுங்கள்
Similar News
News November 3, 2025
வேலூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க.
News November 3, 2025
வேலூருக்கு வரும் துணை முதல்வர் உதயநிதி!

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ.3) பிற்பகல் 3.30 மணிக்கு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து, காட்பாடியில் கிளை செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். நாளை கோட்டை மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.
News November 3, 2025
வேலூர்: செஸ் போட்டியில் நடிகர் பாலா பங்கேற்பு!

வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரம் ஸ்ரீ சக்தி அம்மாவின் 50-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீபுரம் நாராயணி பள்ளிகள் மற்றும் பாரதி செஸ் அகாடமி இணைந்து நடத்திய மாநில அளவிலான செஸ் போட்டி அரியூரில் நடந்தது. இதில் 16 மாவட்டங்களில் இருந்து 500- க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் மற்றும் நடிகர் பாலா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.


