News March 28, 2025
கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஏப்.2-இல் தொடக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சிவகங்கை மாவட்டப் பிரிவு சாா்பில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் வருகிற 1.4.2025 முதல் 8.6.2025 வரை 5 கட்டங்களாக சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெறவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தை 04575 299293 என்ற தொலைபேசி எண்ணிலும், மாவட்ட விளையாட்டு அலுவலரை 74017 03503 என்ற கைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News April 4, 2025
ஆம்புலன்சில் பணிபுரிய வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கையில் 102 மற்றும் 108 ஆம்புலன்சில் பணிபுரிய வேலைவாய்ப்பு முகாம் ஏப்.5 ஆம் தேதி சிவகங்கை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது.சுகாதார ஆலோசகராக பணிபுரிய பி.எஸ்.சி.,நர்சிங் ஜி.என்.எம்., ஏ.என்.எம்., இதில் ஏதாவது ஒரு டிகிரி முடிக்க வேண்டும். வயது 19 முதல் 30க்குள் இருக்க வேண்டும். விபரங்களுக்கு 044 – 28888060 / 89259 – 41977 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.வேலை தேடுவர்களுக்கு SHARE செய்யவும்.
News April 4, 2025
புதிய ரயிலுக்கு முன்பதிவு துவங்கியாச்சு பயன்படுத்துங்க

தாம்பரம்-இராமேஸ்வரம் விரைவு வண்டிக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. இந்த வண்டியில் தாம்பரம் முதல் சிவகங்கை வரையிலான முன்பதிவு கட்டணம்: படுக்கை வசதி இருக்கை – ரூ.290, மூன்றடுக்கு AC வசதி கொண்ட இருக்கை – ரூ.775 இரண்டடுக்கு AC வசதி கொண்ட இருக்கை – ரூ.1105 முன்பதிவில்லா பயணம் ரூ.160 நீங்களும் பயன்பெற்று உங்க நண்பருக்கு SHARE செய்து பயன்பெற வையுங்க.
News April 4, 2025
சிவகங்கையில் போலீசிடமே திருட்டு

சிவகங்கை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிபவர் சுரேஷ்குமார் 40. இவர் காரைக்குடியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிக்கிறார். இவர் பணி முடித்து தனது டூவீலரை ரயில்வே ஸ்டேஷன் எதிரே நிறுத்திவிட்டு காரைக்குடிக்கு ரயிலில் சென்றார். திரும்பி வந்தபோது இவரது டூவீலரை மர்ம நபர்கள் திருடி சென்றனர். கடந்த ஒரு மாதத்தில் 20க்கு மேற்பட்ட டூவீலர்கள் திருடு போய் உள்ளது. தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்.