News April 15, 2025

கோடைகாலத்தில் குடும்பத்துடன் கொண்டாட சூப்பர் ஸ்பாட்

image

வேப்பந்தட்டை வட்டம் கோரையாறு கிராமத்திலிருந்து சுமார் 6 கி.மீ தூரம் மலை மீது அமைந்துள்ளது கோரையாறு அருவி. சுமார் 30 அடி உயரத்தில் மலை உச்சியிலிருந்து மூலிகை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் இந்த இடத்தில் 60 அடி ஆழம் கொண்ட நீர் தேக்கம் உள்ளது. தற்போது உள்ள கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க ஏற்ற இடமாக இது உள்ளது. எனவே இந்த லீவுக்கு உங்க குடும்பத்தோடு போயிட்டு வாங்க. உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க..

Similar News

News October 27, 2025

பெரம்பலூர்: மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

image

பெரம்பலூர், தேனூர் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் ரெங்கராஜ் (57) விவசாயி, இவர் நேற்று இரவு வயலில் மின் மோட்டார் பெட்டியில் பழுதான ஒயரை சரி செய்ய முயன்றார். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரெங்கராஜ் உடலை கைப் பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 27, 2025

தேசிய அளவிலான நீச்சல் போட்டி, பெரம்பலூர் மாணவி தேர்வு

image

சென்னை வேளச்சேரியில் நேற்று (அக்.25) 6வது ஜூனியர் & 11வது சீனியர் மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகள் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவி (CwD Dwarfism) ஜீவா, 3 தங்கப்பதக்கம் பெற்றார். மேலும் இவர் வரும் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ள நேஷனல் அளவிலான நீச்சல் போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.

News October 26, 2025

பெரம்பலூர்: 10th போதும்! அரசு வேலை ரெடி!

image

Eklavya Model Residential Schools-யில் (EMRS) இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் வகை: மத்திய அரசு வேலை
பணியிடங்கள்: 7267
1. வயது: 30 வயதிற்குகுட்பட்டவர்கள்
2. சம்பளம்: ரூ.18,000–ரூ.2,09,200
3. கல்வித் தகுதி: 10th, 12th, PG Degree, B.Ed மற்றும் பட்டப்படிப்பு
4. கடைசி தேதி: 28.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!