News March 25, 2025

கோடநாடு கொலை: ஜெயலலிதா வளர்ப்பு மகனுக்கு சம்மன்

image

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக இன்று (மார்ச் 25) ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மார்ச் 27ம் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்ததன் அடிப்படையில் சுதாகரனுக்கு சம்மன் அனுப்பியதாக சி.பி.சி.ஐ.டி., தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

Similar News

News November 24, 2025

நீலகிரியை சேர்ந்தவருக்கு அரசு விருது

image

நூலகத் தந்தை எனப் போற்றக்கூடிய ரெங்க நாதன் அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நல் நூலகர் விருதும் பரிசுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. குன்னூர் அதிகரட்டி கிளை நூலகத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு நல் நூலகர் விருது வழங்கப்பட்டுள்ளது இவ்விருதிணை தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வழங்கினார்.

News November 24, 2025

BREAKING கூடலூர் அருகே புலி தாக்கி பெண் பலி

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்த பழங்குடியின பெண் புலி தாக்கி உயிரிழப்பு. மேலும் உயிரிழந்த அப்பெண்ணின் உடலானது ஆற்றங்கரையோரம் மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெண்ணை கொன்ற புலியை உடனடியாக பிடிக்க கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

News November 24, 2025

நீலகிரி: B.Sc, B.E, B.Tech, B.Com, படித்தவரா நீங்கள்?

image

நீலகிரி மக்களே, இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA.,
3. கடைசி தேதி : 14.12.2025, 4.
சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500, 5.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 20-அதிகபட்சம் 26,
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE.<<>>
இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!