News March 26, 2025
கோக்சோ வழக்கில் இளைஞருக்கு 30 வருடம் சிறை தண்டனை

பெரம்பலூர் மாவட்டம், கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக மருவத்தூர் காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் மணிகண்டன் (29) என்பவருக்கு 30வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Similar News
News November 5, 2025
புதிய கிரஷர் ஆலையை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராம எல்லைக்குட்பட்ட பகுதியில் விவசாய நிலத்தில் புதியதாக கிரசர் அமைக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியதை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் மனு அளித்தனர். இதனை மறுபரிசீலனை செய்து புதிய கிரசர் ஆலையை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
News November 5, 2025
பெரம்பலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், 12 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.6) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
பெரம்பலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். மற்றவர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க…


