News January 24, 2025

கொள்ளையன் வீட்டில் பிடிபட்ட நகைகள்

image

கர்நாடக மாநிலம் மங்களூரில் வங்கி கொள்ளை வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முருகாண்டி,ஜோஸ்வா ஆகிய இருவர் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று நெல்லை மாவட்டம் பத்மநேரியில் உள்ள முருகாண்டி வீட்டில் 18 கிலோ நகையை மீட்டுள்ளனர். மேலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Similar News

News December 14, 2025

நெல்லை: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

நெல்லை மக்களே இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க

News December 14, 2025

நெல்லை பெண்ணிடம் ரூ.6.89 லட்சம் நூதன மோசடி

image

தாழையூத்தை சேர்ந்த தீபா என்பவர் (45), பகுதிநேர வேலை என்ற பேஸ்புக் விளம்பரத்தை நம்பி, ஆன்லைன் ஹோட்டல் ரிவ்யூ மோசடியில் ஈர்க்கப்பட்டார். ஆரம்பத்தில் சிறிய தொகை தந்து நம்பிக்கை ஏற்படுத்திய மர்மகும்பல், பின் ரூ.6.89 லட்சம் பணத்தை பல்வேறு கணக்குகளுக்கு அனுப்ப வைத்து, திரும்பப் பெற முயலும்போது மேலும் பணம் கேட்டனர். மோசடியை உணர்ந்த தீபா புகாரளித்த நிலையில், சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 14, 2025

நெல்லை: 15 வயது சிறுமி உயிரிழப்பு!

image

சீவலப்பேரி அருகே பாலாமடை கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி பட்டு, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டார். உள்ளூர் சிகிச்சைக்குப் பின் நிலைமை மோசமடைந்ததால் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் உடலைப் பறிமுதல் செய்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!