News March 26, 2025

கொள்ளையன் என்கவுண்டரில் உயிழப்பு

image

சென்னையில் 7 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் என்கவுண்டர் செய்தனர். கொள்ளையடித்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாபர் மற்றும் சூரஜ் ஆகியோரை போலீசார் விமான நிலையத்தில் கைது செய்தனர். நகைகளை பறிமுதல் செய்வதற்காக தரமணி காவல் நிலையம் அழைத்து செல்லும்போது, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஜாபர் சுட முயன்றுள்ளார். அப்போது, தற்காப்புக்காக போலீசார் அவரை என்கவுண்டர் செய்தனர்.

Similar News

News July 5, 2025

சென்னை வானில் சர்வதேச விண்வெளி நிலையம்: நாசா தகவல்

image

சர்வதேச விண்வெளி மையம் பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் மணிக்கு 16 முறை பூமியைச் சுற்றி வருகிறது. இந்த விண்வெளி மையத்தை சில சமயங்களில் வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 6 முதல் 10 வரை சென்னை மக்கள் இரவு 8 மணி முதல் 8.05 மணி வரை ISS-ஐ வானில் காண முடியும் என நாசா அறிவித்துள்ளது. இது ஒரு அரிய வானியல் நிகழ்வாகும்.

News July 5, 2025

சென்னையில் நாளை மினி மாரத்தான்

image

சர்வதேச கூட்டுறவு நாளை முன்னிட்டு, கூட்டுறவுத்துறை சார்பில் ‘COOP-A-THON’ மினி மாரத்தான் போட்டி சென்னை தீவுத்திடலில் நாளை (ஜூலை 6, ஞாயிறு) காலை 5:30 மணிக்கு நடைபெறுகிறது. “சமத்துவம் கூட்டுறவின் மகத்துவம்” என்ற மையக்கருத்தில் 5 கி.மீ. தூரத்திற்கான இந்த ஓட்டப்பந்தயத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.

News July 5, 2025

பல் துலக்கும்போது தண்ணீரைச் சேமிக்க அறிவுறுத்தல்

image

சென்னை குடிநீர் வாரியம் பல் துலக்கும்போது தண்ணீரைச் சேமிக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. ஓடும் குழாய்க்குப் பதிலாக குவளையைப் பயன்படுத்தினால் ஒருமுறைக்கு 4.25 லிட்டர் தண்ணீரைச் சேமிக்கலாம். ஓடும் குழாய் 5 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தும் நிலையில், குவளை வெறும் 0.75 லிட்டர் மட்டுமே பயன்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!