News April 21, 2025
கொளுத்தும் வெயில் தப்பிக்க எளிய டிப்ஸ்

கள்ளக்குறிச்சியில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதிலிருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS,எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
Similar News
News October 25, 2025
நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு கூட்டம்

மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அந்தந்த வார்டு உறுப்பினர் தலைமையில் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அந்தந்த வார்டு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களை குறைகளை தெரிவிக்கலாம். இதில் மூன்று கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளனர்.
News October 25, 2025
கால்நடைகளை பாதுகாத்திட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

மழையில் ஆடுகளை வெளியில் மேச்சலுக்கு ஓட்டிச் செல்வதை தவிர்க்க வேண்டும். ஆட்டு பண்ணையாளர்கள் ஆட்டுக் கொள்ளை நோய்க்கான தடுப்பூசியை அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தினை அணுகி அளிக்கலாம்.
நோயுற்ற கால்நடைகளுக்கு மருத்துவரை அணுகி பயன்பெறலாம். கால்நடை வளர்ப்போர் உரிய வழிமுறைகளை பின்பற்றி மழையில் இருந்து தங்களது கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News October 25, 2025
கள்ளக்குறிச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை.<


