News March 24, 2025
கொல்லிமலை: சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து

நாமக்கல் மாவட்டம், முள்ளுக்குறிச்சி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து கொல்லி மலைக்கு சுற்றுலா சென்று திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 13 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாழப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News September 19, 2025
நாமக்கல் மக்களே இன்று மிஸ் பண்ணாதீங்க!

நாமக்கல்: தனியாா் துறை நிறுவனங்களும்- தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (செப். 19) காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில், வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு 04286-222260 எண்ணில் தொடா்புகொள்ளலாம். SHARE IT!
News September 19, 2025
நாமக்கல்: முட்டை விலையில் மாற்றமில்லை!

நாமக்கல்லில் நேற்று (செப்டம்பர் 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளை கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள போதிலும், அதன் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. முட்டை விலை ரூ.5.25 ஆகவே நீடிப்பதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
News September 19, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்.18 நாமக்கல்-(ராஜமோகன்: 9442256423 ) ,வேலூர் -( ரவி- 9498168482 ), ராசிபுரம் -( கோவிந்தசாமி-9498169110), திம்மநாயக்கன்பட்டி -( ரவி- 9498168665 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.