News October 24, 2024

கொல்லங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை

image

கொல்லங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதுவரை கணக்கில் வராத 33200 ரூபாய் 33,200 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகளவு லஞ்சம் புரள்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில் சோதனை நடைபெற்றது.

Similar News

News December 3, 2025

குமரி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

குமரி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News December 3, 2025

குமரி: தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

image

குளச்சல் அருகே பன விளை சேர்ந்தவர் ஞானசௌந்தரி (64) இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் ஆனப்பாங்குழியில் உள்ள அக்கா வீட்டில் அவரது பராமரிப்பில் இருந்து வந்தார். இவர் பலா மர இலைகளை பறிப்பதற்காக பக்கத்து வீட்டு மாடியில் ஏறிய போது கீழே விழுந்த அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக குளச்சல் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News December 3, 2025

குமரியில் நாளை பல்வேறு பகுதிகளில் கரண்ட் கட்

image

வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்
காரணமாக நாளை (டிச.04) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பார்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, இறச்சகுளம், புத்தேரி, வீரநாரயணமங்கலம் , அருமநல்லூர், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!