News March 18, 2024
கொலை வழக்கில் நான்கு பேர் கைது

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் நேற்று முன்தினம் (மார்.16) மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடத்திய விசாரணையில் ஜமுனா, அவரது கணவா் சுரேஷ், அப்பா முருகன், அம்மா முருகேஸ்வரி ஆகியோா் இணைந்து கணேசனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் நேற்று (மார்.17) கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 21, 2025
தேனி: தேர்வு இல்லை.. வானிலை மையத்தில் வேலை ரெடி

தேனி மக்களே, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. சம்பளம்: ரூ.29,200 – ரு.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க <
News November 21, 2025
தேனி அருகே சிறுமி கர்ப்பம்…பாய்ந்த போக்சோ

தேனி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 15 வயது மாணவி தொடர்ந்து பள்ளிக்கு செல்லவில்லை. இது குறித்த விசாரணையில் சிறுமி அவரது உறவினரான முத்துப்பாண்டி என்பவரை 3 ஆண்டுகளாக காதலித்துள்ளார். இதனை பயன்படுத்திய முத்துப்பாண்டி சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டதால் சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது. இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் முத்துப்பாண்டி மீது போக்சோ வழக்கு (நவ.20) பதிவு செய்து விசாரணை.
News November 21, 2025
தேனி இளைஞர்களுக்கு குட் நியூஸ் சொன்ன கலெக்டர்.!

அக்னிவீர் திட்டத்தின் கீழ் பொதுப்பணி கிளார்க், டிரேட்ஸ்மென் ஆகிய பிரிவுகளில் ஆட்சேர்ப்பு திரளணி உத்திரப்பிரதேசம், பரேலியில் உள்ள ஜாட் ரெஜிமெண்டல் மையத்தில் 08.12.2025 முதல் 16.12.2025 வரை நடைபெறவுள்ளது. தேனி மாவட்ட மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.


