News March 28, 2025
கொலை வழக்கில் சிக்கிய திருவாரூர் நபர்

சிதம்பரம் அம்மாபேட்டையில் நேற்று முன்தினம் இரவு, ஒரு வீட்டில் திருட முயன்றபோது வீட்டின் உரிமையாளர் கத்தியால் வெட்டப்பட்டார். அதுகுறித்த விசாரணையில் திருவாரூர், நன்னிலம் முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்த கேசவன் (52) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் 2020இல் அம்மாபேட்டை பகுதியில், நடராஜன் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டவர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
Similar News
News November 21, 2025
திருவாரூர்: கொட்டி கிடக்கும் அரசு வேலை!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 5810 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any Degree
3. கடைசி தேதி : 27.11.2025
4. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 21, 2025
திருவாரூரில் தொடரப்போகும் மழை

வளிமண்டல மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நவ.21-ம் தேதி (இன்று) முதல் நவ.26-ம் தேதி (புதன்கிழமை) வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 21, 2025
திருவாரூர்: ஆட்சியர் தலைமையில் SIR ஆலோசனைக் கூட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (நவ.20) மாலை திருவாரூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.


