News April 26, 2025
கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேர் கைது

தி.மலை அஜீஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜா. வேட்டவலம் சாலையில் பழக்கடை வைத்து உள்ளார். இவரது கடைக்கு 4 பேர் கொண்ட கும்பல் வந்து மாமூல் கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் கொடுக்காததால், நாங்கள் பெரிய ரவுடி என மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து கடையில் இருந்த பழங்களை கொள்ளையடித்துக் கொண்டு சென்று உள்ளனர். இது குறித்து போலீஸிடம் வழக்கு பதிவு செய்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News December 14, 2025
உதயநிதியை புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்

தி.மலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.“கொள்கை எதிரிகள் உதயநிதியை ‘Most Dangerous’ என கூறுகிறார்கள். அந்த அளவுக்கு அவர் கொள்கையில் உறுதியாக இருக்கிறார்” என பேசினார். 2026 தேர்தல் இலக்கை நோக்கி இளைஞர்கள் களப்பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் பேசினார்.
News December 14, 2025
தி.மலை: முதல்வருக்கு வெள்ளி சிம்மாசனம் பரிசு

திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு விழா இன்று (டிச.14) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மலை மாவட்ட இளைஞரணி சார்பில் வெள்ளி சிம்மாசனம் பரிசாக வழங்கப்பட்டது. உடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் துரைமுருகன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
News December 14, 2025
தி.மலை: ரூ.1.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் டிஆர்டிஓ-வில் 17 வகை பிரிவுகளின் கீழ் 764 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, BE, B.Sc படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,900-ரூ.1,12,400 வரை வழங்கப்படும். 18-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. விருப்பமுள்ளவர்கள் ஜன.1ஆம் தேதிக்குள் இங்கு <


