News March 24, 2025

கொலை சம்பவத்தில் மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரண்

image

ஈரோடு: நசியனூர் அருகே சேலத்தைச் சேர்ந்த ஜான் என்பவர் கடந்த 19ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அப்போது, போலீசார் விரைந்து 4 கொலையாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு, கடந்த 20ஆம் தேதி முக்கிய குற்றவாளிகள் இருவர் சரணடைந்துள்ள நிலையில் தற்போது கோகுல சுகவேஸ்வரன் என்பவர் ஈரோடு நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

Similar News

News September 16, 2025

ஈரோட்டில் வெளுத்து வாங்க போகும் மழை! ALERT

image

ஈரோடு மாவட்டத்தில் வெயில் வட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (செப்.16) 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கையாக இருக்க அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

News September 16, 2025

ஈரோடு: டிகிரி முடித்தால் UPSC நிறுவனத்தில் வேலை!

image

ஈரோடு மக்களே.., மத்திய அரசின் ‘UPSC’ நிறுவனத்தில் ‘Accounts Officer’ பணிக்கு 35 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.47,000 முதல் சம்பளம் வழங்கப்படும். வருகிற அக்.2ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 16, 2025

ஈரோட்டில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

image

ஈரோடு: பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டங்களுக்கு வரும் செப்.19ஆம் தேதி ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் விவசாய நிலங்களை நில அளவைத்துறை மூலம் அளவீடு செய்தல், விவசாய நிலங்கள், பாதைகள், ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காண விவசாயிகள் மனு வழங்கலாம்.

error: Content is protected !!