News December 6, 2024

கொரோனா நிவாரண நிதி வழங்கிய எம்.எல்.ஏ.

image

புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதி உதவியின் கீழ் கொரோனா காலத்தில் உயிரிழந்தோருக்கு ரூபாய் ஐம்பது ஆயிரத்திற்கான காசோலையினை, நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இன்று தனது அலுவலகத்தில் வழங்கினார். இதில் மூன்று குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

Similar News

News November 8, 2025

புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது

image

புதுவை, காலாப்பட்டு போலீசார் தகவலின் பேரில் சில கடைகளில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது புதுவை பல்கலைகழகம் பகுதியில் 4 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற காலாப்பட்டு பெர்னாண்டஸ் (49), கனகசெட்டிகுளம் சக்திவேல் (47), விக்னேஸ்வரன் (30), பாபு (46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களது கடைகளில் ரூ.9,655 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

News November 7, 2025

புதுச்சேரி: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

image

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கை முடக்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT

News November 7, 2025

புதுச்சேரி: பொதுமக்கள் குறை தீர்வு முகாம் அறிவிப்பு

image

புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், (நவ.8) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும் என புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் இன்று கலைவாணன் தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!