News April 29, 2025
கொம்பன் காளையை கண்டுபிடித்தால் ரூ.30 ஆயிரம்

கண்டரமாணிக்கத்தில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி மாபெரும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் அவிழ்த்துவிட்ட கொம்பன் காளை கே.வலையப்பட்டியில் பிடி கயிறுடன் சென்ற நிலையில் காளையை காணவில்லை, கொம்பன் என்று கூப்பிட்டால் ஓடிவரும் காளையை கண்டு பிடித்து கொடுத்தால் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என காளையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 9326506153, 7094924233, 8939258484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 9, 2025
சிவகங்கையில் 8 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
டிஐஜி மூர்த்தி உத்தரவின் பேரில், சரவணன் சிவகங்கை நகர், முகமது எர்சாத் கமுதி, ராஜ்குமார் பரமக்குடி, தெய்வீக பாண்டியன் அபிராமம், ரவீந்திரன் தேவகோட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். அன்னராஜ் சாயல்குடி, குமாரவேல்பாண்டியன் மானாமதுரைக்கு, சக்குபாய் மானாமதுரை மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News November 9, 2025
காரைக்குடி மக்களே இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

காரைக்குடி தொகுதிவாக்காளா் பதிவு அலுவலா் தொடர்பு எண்கள; தேவகோட்டை சாா் ஆட்சியா்- 9445000470, காரைக்குடி வட்டாட்சியா் – 9445000648, தேவகோட்டை வட்டாட்சியா்-9445000649, காரைக்குடி மாநகராட்சி ஆணையா்- 7397382168, தேவகோட்டை நகராட்சி ஆணையா் -7397382165, காரைக்குடி தொகுதி வாக்காளர்கள் மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு வாக்காளர் சீட்டை சரி செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News November 9, 2025
சிவகங்கை: காவலர் தேர்வு மைய வரைபடம் வெளியீடு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (நவ-9) நாளை சிவகங்கை, காரைக்குடியில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு வீரர் தேர்வு நடைபெறும். 5 மையங்களான அழகப்பா கல்லூரிகள், டாக்டர் உமையாள் ராமநாதன் கல்லூரி, கம்பன் கற்பகம், நியூ மகரிஷி வித்யா மந்திர் ஆகியவற்றில் 4329 தேர்வர்கள் பங்கேற்கின்றனர். பழைய/புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையத்திலிருந்து வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


